Connect with us

சினிமா

நானும் வாரிசு படத்துக்கு போட்டியா வரலாமா? வால்டர் வீரய்யா மூலம் சிரஞ்சீவி செய்த சம்பவம்!

Published

on

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடிப்பில் கடந்த ஆண்டு ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. 1100 கோடி வசூல் செய்து சாதனை படைந்த அந்த படம் ஆஸ்கர் போட்டியில் மும்முரமாக உள்ளது.

அதே நேரம் கடந்த ஆண்டு அப்பா சிரஞ்சீவி உடன் மகன் ராம்சரண் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் படு தோல்வியை சந்தித்தது. ஆனாலும், தொடர்ந்து மகனுக்கு போட்டியாக ஹீரோவாக இந்த வயதிலும் சிரஞ்சீவி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

ராம்சரணின் அடுத்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே வால்டர் வீரய்யா படத்துடன் இந்த பொங்கலுக்கு வாரிசு படத்துக்கு போட்டியாக வந்து இறங்கி உள்ளார் சிரஞ்சீவி. அந்த படத்தின் அதிரடியான ட்ரெய்லர் இன்று வெளியானது.

ஏற்கனவே மோகன் ராஜா இயக்கத்தில் சல்மான் கான், நயன்தாரா உடன் இணைந்து நடித்த சிரஞ்சீவியின் காட் ஃபாதர் திரைப்படமும் 100 கோடி வரை வசூல் அள்ளியது. அடுத்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.

 

முன்னதாக வெளியான பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி ட்ரெய்லர் ஒரு பக்கம் வாரிசு படத்துக்கு பெரும் போட்டியாக மாறி உள்ள நிலையில், வால்டர் வீரய்யா படத்தின் ட்ரெய்லரும் தெறிக்கவிடுகிறது.

சிரஞ்சீவி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், கேத்தரின் தெரசா மற்றும் ரவி தேஜா என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

டோலிவுட்டில் இந்த முறை விஜய்யின் வாரிசு படம் மிகப்பெரிய வரவேற்பை பெறுமா அல்லது பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா வெல்லுமா என பெரிய போட்டியே தொடங்கி விட்டது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?