வீடியோ
உன்ன கல்யாணம் பண்ணிட்டான்.. என்ன பண்ணிட்டான்.. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ட்ரெய்லர்!

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில், விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் விரைவில் ரிலீஸாக இருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரெயல்ர் என்று ரிலீஸ் ஆகியுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதல் செய்து, ஒருவரை திருமணம் செய்த பிறகு, மற்றொருவர் என்ன செய்கிறார் என்பதை கதையாக காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சொல்வது போல டிரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது.
அனிருத் இசையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ட்ரெய்லர் மேலும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது.