வீடியோ
இண்டெர்நெட் பசங்க வீடியோ பாடல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்ஷிப் டீமை சேர்ந்த கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ரியோ ஹீரோவாக அறிமுகமாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இண்டெர்நெட் பசங்க பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 14ம் தேதி நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், படத்தை புரமோஷன் செய்யும் நோக்கில் அனைத்து யூடியூபர்களும் நடனமாடும் இண்டர்நெட் பசங்க ஓபனிங் பாடலை தற்போது நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.
இந்த பாடலில் மதன் கெளரி. பிஹைண்ட்வுட்ஸ், கலாட்டா, இந்தியா க்ளிட்ஸ், பரிதாபங்கள், மைக்செட், சோதனைகள், ஆவ்சம்மச்சி, நக்கலைட்ஸ், பிளாக்ஷிப் என பல பிரபலமான யூடியூபை சேர்ந்த பிரபலங்கள் பாடலில் சில வினாடிகள் வந்து செல்கின்றனர்.
இதனால், இத்தனை யூடியூப் பிரபலங்களின் ரசிகர்களும், இந்த படத்திற்கு ஆதரவு தருவார்கள் என்ற கார்த்தியின் வியூகம் தெளிவாக தெரிகிறது.