சினிமா
இது கொல மாஸ்… தெறி மாஸ்….வலிமை பட புதிய புரமோஷன் வீடியோ…

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வலிமை’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தயாரிப்பாளர் போனி கபூர் தினந்தோறும் ‘வலிமை’ படத்தின் புரமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய புரமோஷன் வீடியோவை போனிகபூர் வெளியிட்டுள்ளார். இதில், இதற்கு முன்பு வெளியிட்ட புரமோஷன் வீடியோக்களில் இடம் பெற்ற சில காட்சிகளோடு சேர்த்து பல புதிய ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
நாளை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram