Connect with us

தமிழ்நாடு

அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர்: டிடிவி தினகரன் அதிர்ச்சி!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ஒருவர் திடீரென அதிமுகவில் இணைந்து உள்ளதால் டிடிவி தினகரன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சி தாவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவரே இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி சந்திரன், திடீரென அமைச்சர் தங்கமணி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் எஸ் சந்திரன், திமுக சார்பில் பொன்னுசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பி சந்திரன் ஆகியோர்கள் மற்றும் சில சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்த போது திடீரென அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் பி.சந்திரன் அதிமுகவில் இணைவதாக அறிவித்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் டிடிவி தினகரன் பெரும் அதிர்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்செங்கோடு வேட்பாளர் ஹேமலதா என்பவர் போட்டியில் இருந்து விலகி விட்டதாகவும் அவர் அதிமுகவில் இணைந்து விட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது சேந்தமங்கலம் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரும் விலகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..