சினிமா
மீண்டும் பிகினியில் கலக்கும் நயன்தாரா?

நடிகை நயன்தாரா மீண்டும் பிகினியில் நடிக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், விஜய்சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘ஜவான்’. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த படப்பிடிப்புக்காக தனது கணவர் விக்னேஷ் சிவன்ன் மற்றும் குழந்தைகளுடன் அவர் ஏர்போர்ட்டுக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வலுவான ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் நயன்தாரா பிகினியில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியது. சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ படத்தில் நடிகை தீபிகா படுகோனே பிகினியில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இதனை மனதில் கொண்டே படத்தில் நயன்தாராவுக்கு பிகினி காட்சி இருக்கும் என தகவல் வெளியானது.
ஆனால் அதனை படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. கதைக்குத் தேவைப்படுவதைத் தாண்டி நடிகைகள் பிகினியில் வருவதற்கும், அவர்களுடன் நெருக்கமாக நடிப்பதற்கும் ஷாருக்கானும் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.