சினிமா செய்திகள்
’வலிமை’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதும் என்றும் திரையுலகில் உள்ள ஒரு சிலர், தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலர் வதந்தியை கிளப்பி விட்டனர்
அதேபோல் இன்னும் சிலர் ’வலிமை’ திரைப்படம் கிறிஸ்மஸ் தினத்தில் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்கள். ஆனால் தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சற்றுமுன் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பொங்கல் என உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வலிமை’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ’வலிமை’ படத்தின் டீஸர் டிரெய்லர் என அடுத்தடுத்து அப்டேட் படம் வெளியாகும் வரை அஜித் ரசிகர்களுக்கு அளிக்கவும் படக்குழுவினர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.







