சினிமா
வலிமை மேக்கிங் வீடியோ பார்த்து அழுதுட்டோம்!… கதறும் அஜித் ரசிகர்கள்…

நடிகர் அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியானது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பிரமித்துப் போய் உள்ளனர். இந்த வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அஜித் மட்டுமின்றி படக்குழு படக்குழுவினர் ஒட்டுமொத்த படக்குழுவும் இந்த படத்தின் மோட்டார் பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்காக எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து பணி புரிந்து இருக்கிறார்கள் என்பதை இந்த மேக்கிங் வீடியோவில் காணமுடிகிறது.
ரசிகர்களுக்கு திரில்லான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அஜித் தன் உயிரையே பணயம் வைத்து நடித்து உள்ளார். குறிப்பாக இந்த மேக்கிங் வீடியோ முடிவடையும்போது பைக்கில் வேகமாக வரும் அஜீத் திடீரென கீழே விழுவதும் அதனை அடுத்து படக்குழுவினர் பதறி அடித்துக்கொண்டு அருகே சென்று பார்த்தபோது அசால்டாக எழுந்து நிற்பதுமான காட்சிகள் பிரமிக்க வைக்கிறது
அதன் பின்னர் அதே காட்சியில் மீண்டும் பைக்கில் சீறிவரும் அஜித்தை பார்க்கும்போது நிச்சயம் திரையரங்குகளில் கைத்தட்டல் விண்ணைப் பிளக்கும் என்பது உறுதி.
அதேநேரம், வீலிங் செய்யும் போது அஜித் கீழே விழும் காட்சியை பார்த்த பல அஜித் ரசிகர்கள் வீடியோவில் அந்த காட்சி வரும் போது தங்களை அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டதாக பதிவிட்டு வருகின்றனர்.