சினிமா செய்திகள்
அட்டகாசமான ‘வலிமை’ மேக்கிங் வீடியோ: இணையத்தில் வைரல்!
Published
1 year agoon
By
Shiva
தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் படக்குழுவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பிரமித்துப் போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அஜித் மட்டுமின்றி படக்குழு படக்குழுவினர் ஒட்டுமொத்த படக்குழுவும் இந்த படத்தின் மோட்டார் பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்காக எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து பணி புரிந்து இருக்கிறார்கள் என்பதை இந்த மேக்கிங் வீடியோ வில் இருந்து காணமுடிகிறது
ரசிகர்களுக்கு திரில்லான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அஜித் தன் உயிரையே பணயம் வைத்து நடித்து உள்ளார். குறிப்பாக இந்த மேக்கிங் வீடியோ முடிவடையும்போது பைக்கில் வேகமாக வரும் அஜீத் திடீரென கீழே விழுவதும் அதனை அடுத்து படக்குழுவினர் பதறி அடித்துக்கொண்டு அருகே சென்று பார்த்தபோது அசால்டாக எழுந்து நிற்பதுமான காட்சிகள் பிரமிக்க வைக்கிறது
அதன் பின்னர் அதே காட்சியில் மீண்டும் பைக்கில் சீறிவரும் அஜித்தை பார்க்கும்போது நிச்சயம் திரையரங்குகளில் கைத்தட்டல் விண்ணைப் பிளக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தின் அட்டகாசமான மேக்கிங் வீடியோ:
You may like
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
நாயகியாகும் உலக அழகி, படப்பிடிப்புக்கு முன்பே பிசினஸ்: அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் மாஸ் தகவல்கள்!
-
புகாருக்கு பின் மீண்டும் டாப்லெஸ் வீடியோ வெளியிட்ட உர்பி ஜாவேத்.. வைரல் வீடியோ
-
இனி டீசர், டிரைலர்களை டுவிட்டரில் பதிவு செய்ய முடியாதா? எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு!
-
தொழிலதிபரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. ரூ.2.69 கோடி மோசடி செய்த இளம்பெண்
-
துணிவு விமர்சனம்: கிளைமேக்ஸ் வரைக்கும் நல்லா தானே போச்சு; கடைசியில எச். வினோத்துக்கு என்ன ஆச்சு?