சினிமா
பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்கு பிறகு தான் ஏகே 62 ஆரம்பமா?

அஜித்தின் ஏகே 62 படம் கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்பமாக வேண்டிய நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் செய்த கால தாமதம் காரணமாக படத்தை இயக்கும் வாய்ப்பையே அதிரடியாக இழந்தார்.
இயக்குநர் மகிழ் திருமேனி தான் அடுத்ததாக ஏகே 62 படத்தை இயக்குவதற்காக லைகாவால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானாலும், அதிகாரப்பூர்வமாக அதனை அறிவிக்க அஜித் இன்னும் க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
மார்ச் மாத இறுதிக்குள் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து ஏங்கித் தவித்த ஏகே ரசிகர்களுக்கு மேலும், அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போது ஏகே 62 பற்றிய கவலை தரும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இந்த மாதம் வரை ஏகே 62 அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருந்த லைகா நிறுவனம் கடைசி வரை படத்தை தொடங்க முடியாத சூழலில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக அடுத்த மாதம் முழுவதும் தீவிர சூறாவளி சுற்று பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

#image_title
இந்நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட்டை வெளியிட்டால் சரியா வராது என முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
ஏப்ரல் மாதம் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2 படத்தை ரிலீஸ் செய்து விட்டு அதன் பின்னர் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று பிரம்மாண்ட அறிவிப்புடன் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாமா என்கிற பேச்சுவார்த்தகளை லைகா நிறுவனம் தற்போது அஜித் தரப்புடன் நடத்தி வருவதாக கூறுகின்றனர்.
நடிகர் அஜித் அதற்கு முன்னதாக ஏகே 62 அறிவிப்பை வெளியிட சம்மதித்தால் உடனடியாக அறிவிப்பை வெளியிட்டு படப்பிடிப்பையும் ஆரம்பிக்க ரெடியாக லைகா உள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.