தமிழ்நாடு
அதிமுக இப்படி பண்ணி இருக்க கூடாது.. ரொம்ப தப்பு.. எடப்பாடியை திட்டி தீர்த்த பாஜக அமர் பிரசாத்

சென்னை: அதிமுக இப்படி செய்திருக்க கூடாது.. அதிமுக தவறு செய்துவிட்டது என்று பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி திட்டி தீர்த்து இருக்கிறார்.
பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். நிர்மல் வெளியேறிய சில நிமிடங்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் நேற்று அண்ணாமலையை சரமாரியாக விமர்சனம் செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து உள்ளார்.
இந்த நிலையில்தான் அதிமுக மீது கோபம் அடைந்த அமர் பிரசாத் ரெட்டி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் தனது போஸ்டில், பாஜக மட்டுமே தமிழ்நாட்டின் எதிர்காலம். அதிமுக தனது கோட்டையான கொங்கு மண்டலத்திலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம், என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதிமுக கூட்டணி கட்சியாக இருந்தியு கொண்டு இப்படி செய்து இருக்க கூடாது. தமிழ்நாட்டில் பாஜகதான் ஆட்சி அமைக்க போகிறது. அண்ணாமலை தலைமையிலான பாஜகதான் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை!
நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?