சினிமா செய்திகள்
ரூ.71 லட்சம் மோசடி செய்தாரா ஆர்யா: சென்னை ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு!

இளம்பெண் ஒருவர் தன்னை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூபாய் 71 லட்சம் மோசடி செய்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் வித்ஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வழக்கில் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் இதையடுத்து அவருக்கு தான் பணம் கொடுத்ததாகவும் ரூபாய் 71 லட்சம் வரை தன்னிடம் மோசடி செய்த ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் ஆர்யா பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கேட்டதை அடுத்து ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடிகர் ஆர்யா மீது ரூ.71 லட்சம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் அவரது இமேஜ் வெகுவாக உயர்ந்தது. இந்த நிலையில் திடீரென மோசடி வழக்கு குறித்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



















