சினிமா
ஷோபிதாவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்தாரா நாக சைதன்யா?

நடிகர் நாக சைதன்யா கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் செலவில் புது வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்களது மணவாழ்க்கை விலக்குக்குப் பிறகு தங்களது படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த 2017-ல் இருவருக்கும் திருமணம் நடந்து மூன்றே வருடங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் திருமணம் ஆகி ஒன்றாக இருந்தபோது, 100 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை ஹைதராபாத்தில் வாங்கி அதில் வசித்து வந்தனர்.
விவாகரத்துக்குப் பின்பு சமந்தா மட்டும் இப்போது அந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா ’பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபலாவுடன் டேட் செய்து வருவதாகப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இது குறித்து இருதரப்பும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும், நாக சைதன்யா சுமார் 15 கோடியில் புது வீடு ஒன்றை ஹைதராபாத்தில் வாங்கி இருப்பதாகவும் அந்த வீட்டில்தான், நாக சைதன்யா- ஷோபிதா இருவரும் குடியேறப்போவதாகவும் சொல்லப்படுகிறது.