Connect with us

சினிமா செய்திகள்

நீர் சறுக்கு விளையாட்டில் முதலிடம் பெற்று அசத்திய தமிழ் நடிகை!

Published

on

தமிழ் திரை உலகில் உள்ள சில நடிகர் நடிகைகள் நடிப்பில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக அஜித் துப்பாக்கி சுடும் துறையிலும் ஈடுபட்டு அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் நடிகை ஒருவரும் நீர் சறுக்கு விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் நடந்த துடுப்பு கொண்ட நீர் சறுக்கு விளையாட்டில் நடிகை ரெஜினா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ரெஜினா முதலிடம் பிடித்ததை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரெஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்

பெண்கள் நீர் சறுக்கு போட்டியில் முதலிடம் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் என்னுடைய பயிற்சியாளருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் வெளியான ’நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ’சக்ரா’ போன்ற படங்களில் ரெஜினா சிறப்பாக நடித்து இருந்தார் என்பதும் இந்த இரண்டு படங்களிலும் அவருடைய கேரக்டருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் ரெஜினா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

https://www.instagram.com/p/CM9f5wilWqj/

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Menu, map, and offers on one mobile page – with DR68 SEO and zero monthly fees..