சினிமா செய்திகள்
நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல தமிழ் நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீரென இன்று மாரடைப்பால் காலமான செய்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கே பாலச்சந்தர் இயக்கிய ’அவள் அப்படித்தான்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சித்ரா, கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ’சேரன் பாண்டியன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் திரையுலகில் நல்லெண்ணெய் சித்ரா என்று அழைக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு உள்பட பல முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்த இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறார்
இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நல்லெண்ணெய் சித்ராவுக்கு திடீரென இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
நல்லெண்ணெய் சித்ராவின் மறைவை அடுத்து திரையுலக பிரமுகர்கள் அவருடைய குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.















