இந்தியா
இந்தியாவில் மாரடைப்பால் ஆண்டுக்கு 28.1% பேர் இறப்பு: மத்திய அரசு!

இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில், ஆண்டுக்கு 28.1 சதவீதம் மாரடைப்பால் ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1 சதவிகிதம் மாரடைப்பால் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவுகளின் படி 1990-ல் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை 15.2 சதவிகிதமாக இருந்த நிலையில், 2023-ல் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை 28.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
தினசரி புகை பிடிப்பவர்களில் 32.8 சதவிகிதம் பேருக்கும், மதுப் பழக்கம் உள்ளவர்களில் 15.9 சதவிகிதம் பேருக்கும், பெதிய உடல் உழைப்பு இல்லாததால் 41.3 சதவிகிதம் பேருக்கும் மாரடைப்பால் இறப்பு ஏற்பட்டுள்ளது.