விமர்சனம்
சித்தாரே ஜமீன் பர் திரைப்பட விமர்சனம்!

சித்தாரே ஜமீன் பர் என்பது 2007-ம் ஆண்டு வெளிவந்த தாரே ஜமீன் பர் படத்தின் தொடர்ச்சி போல உள்ளது. இந்த படத்தில் அமீர்கான் மற்றும் ஜெனிலியா டிசோசா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் மாற்றுத் திறனாளி நபர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணர்ச்சிகரமான கதை.
கதையின் சுருக்கம்:
குல்ஷன் அரோரா (அமீர்) ஒரு கோபக்கார கூடைப்பந்து உதவிப் பயிற்சியாளர். ஒரு பிரச்சனை காரணமாக, அவர் சமூக சேவையாக மாற்றுத்திறனாளிகளுக்கு கூடைப்பந்து கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தண்டனை பெறுகிறார். ஆரம்பத்தில் அவருக்கு இந்த வேலை பிடிக்காது. ஆனால் நாளடைவில், அவங்கதான் அவருக்கு வாழ்க்கையைப் பற்றி பெரிய பாடம் கற்றுத் தருகிறார்கள்.
முதல்பாதி மெதுவாக போகிறது. கதையை அமைத்த விதம் சற்று சலிப்பாகவும் இருக்கும். அமீர்கான் மட்டுமே அந்த பகுதியை சுமத்துகிறார். ஆனால் இடைவேளைக்கு பின் படம் உயிர் பெறுகிறது. சிரிப்பும், உணர்ச்சியும் கலந்த காட்சிகள் சிறப்பாக அமைகின்றன. குறிப்பாக பிரிஜேந்திர காலா நடித்த காட்சிகள் நன்றாக இருக்கும்.
நடிப்பு மற்றும் இசை:
அமீர்கான் வழக்கம் போல நன்கு நடித்துள்ளார். ஜெனிலியா அவரது மனைவியாக அழகாகத் தோன்றுகிறார். மாற்றுத்திறனாளி பாத்திரங்களில் நடித்த குழந்தைகள் மற்றும் நபர்கள் மிக நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். ஷங்கர்-ஏசான்-லாய் இசை சராசரி மட்டுமே. ஆனால் படத்துக்கு பொருத்தமாக உள்ளது.
சித்தாரே ஜமீன் பர் ஒரு உணர்வுபூர்வமான, நல்ல மனசாட்சிப் படம். சில இடங்களில் மெதுவாக இருந்தாலும், படம் மனதில் நன்றாக பதியும். குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் இது.
