சினிமா
வாரிசு ட்ரெய்லர் வர லேட்டாகும், என்ன பண்ணலாம்? தளபதி 67 அப்டேட்டை களமிறக்கிய விஜய்!

துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 36 மில்லியன் வியூஸ் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், இன்னமும் வாரிசு படத்தின் ட்ரெய்லரை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லையே என வாரிசு டீமே கலக்கத்தில் உள்ளது.
ஏற்கனவே பிரசாத் லேப்பில் ஆரம்பிக்கப்பட்ட தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கை இன்று முதல் ஆரம்பித்ததாக அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட சொல்லுங்க என சிம்பிளாக அந்த பிரச்சனையை தளபதி விஜய் லெஃப் ஹேண்டில் டீல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரிசு படத்தின் சென்சார் இன்னமும் நடைபெறாத நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 4ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்தின் துணிவு ட்ரெய்லர் வெளியானதை பார்த்த நிலையில், இன்னமும் ஷார்ப்பாக விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லரை மீண்டும் ரீ எடிட் செய்வதாக அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்களை நல்லாவே ஓட்டி வருகின்றனர்.
நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பகக்த்தில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது. எங்கள் தளபதி விஜய் அதே எனர்ஜியில் அப்படியே இருக்கிறார். தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஃபுல் ஸ்விங்கில் நடைபெற்று வருவதாக ட்வீட் போட்டுள்ளார்.

வாரிசு படம் விஜய் ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும் என தில் ராஜு மற்றும் வம்சி உள்ளிட்டோர் உறுதி அளித்துள்ளனர். ஆனால், ரசிகர்கள் ஒட்டுமொத்த கவனமும் வாரிசு படத்தைத் தாண்டி தளபதி 67 படத்தின் மீது தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.








