சினிமா செய்திகள்
அதிர்ச்சி.. நடிகர் சத்யராஜ் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றின் மறு உருவான ஓமிக்ரான் தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று நடிகர் சத்யராஜ் கோவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் இருந்துள்ளது. இதை அடுத்து அவருக்குச் சோதனை செய்து பார்த்ததில் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
எனவே நடிகர் சத்யராஜ் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அண்மையில் நடிகர் திரிஷா, நடிகர் மகேஷ் பாபு, இசை அமைப்பாளர் தமன் உள்ளிட்டவர்களுக்கும் கோவிட்-19 தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 4531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து செங்கல்பட்டில் 1039 பேரும், கோவையில் 408 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: ஒரு நாள் பாதிப்பு 9 ஆயிரம்.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.!


















