தமிழ்நாடு
சென்னையில் எந்தெந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம்: தற்போதைய நிலை!

சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் நீர் தேங்கி இருப்பதன் காரணமாக போக்குவரத்து ஒருசில பகுதிகளில் மட்டும் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது படிப்படியாக அனைத்து சாலைகளிலும் உள்ள நீர் வெளியேற்றப்படுகிறது என்பதும் சுரங்கப் பாதைகளும் ஒவ்வொன்றாக சரிசெய்யப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நீர் தேங்கி உள்ள சாலைகள் மற்றும் மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் பின்வருவன:
1. மாம்பலம் – ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப் பாதை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
2. வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு சாலை செல்ல கேசவர்தினி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.
3/ வாணி மஹால் முதல் பென்ஸ்பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.#chennaicitypolice#greaterchennaipolice#chennaipolice#shankarjiwalips#gcprescueteam pic.twitter.com/z63O9gESbG
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 1, 2021


















