சினிமா
அண்ணாத்த படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா?…தீயாய் பரவும் தகவல்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் 2020 தீபாவளிக்கு ரிலீஸ் என திட்டமிடப்பட்டு கொரோனா காரணமாக 2021 தீபாவளிக்கு அதாவது ஒருவருடம் தள்ளி வெளியானது. இந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி வெளியானது. பல மாதங்களுக்கு பின்பு தியேட்டர்கள் திறக்கப்பட்டது, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை மற்றும் தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் இப்படத்தை காண தியேட்டருக்கு சென்றனர். எனவே, முதல் 4 நாட்கள் இப்படம் நல்ல வசூலை பெற்றது. ஆனால், எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் மழை காரணமாக இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, அதிக வசூலை பெறும் சென்னையில் கனமழை காரணமாக அதிகமான கூட்டம் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படது. இதனால் அண்ணாத்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இப்படத்திற்கு ரஜினி வாங்கும் 100 கோடி சம்பளத்தில் 30 கோடி குறைத்து, அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால், சினிமா டிரக்கார்ஸ் என்கிற பெயரில் டிவிட்டரில் பலரும் இப்படம் ரூ.200 கோடி வசூலை தாண்டிவிட்டதாக செய்திகள பகிர்ந்து வருகின்றனர்.
முதல் வாரம் – 202.47 கோடி
2 வது வாரம்:
முதல் நாள் – 4.05 கோடி
2ம் நாள் – 4.90 கோடி
3ம் நாள் – 6.21 கோடி
4ம் நாள் – 7.14 கோடி
5ம் நாள் – 1.02 கோடி
என மொத்தம் இதுவரை அண்ணாத்த படம் ரூ.225.79 கோடி வசூலித்து விட்டதாக பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை நிலவரம் என்ன என்பது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


















