சினிமா
அப்பாவை இயக்கிய சந்தோஷம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட சூட்டிங் ஸ்பாட் பிக்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் மெயின் கேமியோவாக ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் பக்காவான மும்பை டானாக வருகிறார்.

#image_title
மேலும், இந்த படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவும் கேமியோ ரோலில் கலக்க உள்ளார்.
மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாகவும் ரஜினிகாந்த் மற்றும் கபில் தேவ் உடன் பணியாற்றிய அனுபவத்தை மறக்கவே முடியாது என சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்துள்ளார்.

#image_title
ரஜினிகாந்தின் பழைய ஹேர்ஸ்டைலை அப்படியே கொண்டு வந்ததே சூப்பர் மேடம், படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உழைப்பை பாராட்டி வருகின்றனர்.
லால் சலாம் படத்தின் நாயகர்களான விஷ்ணு விஷால், விக்ராந்த், கேமியோ ரோலில் நடித்துள்ள கபில் தேவ் உள்ளிட்டவர்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#image_title
வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக தீபாவளிக்கு லால் சலாம் திரைக்கு வருமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.