தமிழ்நாடு
முதல்வர் அறிமுகம் செய்த ‘வலிமை’ சிமெண்ட் விலை இவ்வளவுதானா?

தமிழக அரசின் வலிமை சிமெண்ட் இன்று தமிழக முதல்வரால் வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளிவந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ‘வலிமை’ சிமெண்ட்டை அறிமுகம் செய்தார்.
தமிழக அரசின் டான்செம் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த சிமெண்ட் பிரிமியம் மற்றும் சுப்பிரியர் என்ற இரண்டு தரங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ‘வலிமை’ சிமெண்ட்டை விற்பனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சிமெண்ட் விலை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசே மிக குறைந்த விலையில் இந்த சிமெண்ட்டை உற்பத்தி செய்து உள்ளது. இந்த நிலையில் இந்த சிமெண்ட் பொதுமக்கள் மற்றும் கட்டிட கான்ட்ராக்டர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
50 கிலோ எடை கொண்ட இந்த சிமெண்ட் மூட்டை பிரிமியம் ரூபாய் 360 என்றும் சுப்ரியர் ரூபாய் 400 என்றும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தனியார் சிமெண்ட் 500 ரூபாய் வரை விற்பனை செய்துவரும் நிலையில் சுமார் 100 முதல் 140 ரூபாய் வரை வலிமை சிமெண்ட் விலை குறைவானது என்பதும் அது மட்டுமின்றி தனியார் சிமெண்ட்டை விட தரம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வலிமை சிமெண்ட் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் தனியார் சிமெண்ட் விலையும் குறையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


















