சினிமா
மாஸ் லுக்கில் விஜய் சேதுபதி!… காத்துவாக்குல ரெண்டு காதல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…

தமிழில் போடா போடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் நானும் ரவுடிதான். இப்படத்தில் அவர் அமைத்திருந்த திரைக்கதை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், தன்னை ரவுடி போல் காட்டிக்கொள்ளும் விஜய் சேதுபதி மற்றும் காது கேட்காத பெண் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதோடு, அனிருத்தின் இசையில் பாடல்களும் செம ஹிட்.
தற்போது மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரின் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை அவர் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை டிவிட்டரில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் ‘வெல்கம் ரேம்போ’ என பதிவிட்டுள்ளார். எனவே, அப்படத்தில் விஜய்சேதியின் பெயர் ரேம்போவாக இருக்கலாம் என கருதப்படுகிறது..



















