சினிமா செய்திகள்
’ஜெய்பீம்’ படத்தை திரையிட்டால் சட்டப்படி நடவடிக்கை: சூர்யா எச்சரிக்கை!

’ஜெய்பீம்’ திரைப்படத்தை பொது இடங்களில் திரையிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் ’ஜெய்பீம்’ திரைப்படம் இன்று காலை அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் சூர்யாவுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். சூர்யாவின் ’ஜெய்பீம்’ திரைப்படம் ஒரு சில ஹோட்டல்களில் ஒளிபரப்பபடுவதாகவும் பணம் பெற்றுக்கொண்டு ரசிகர்கள் படத்தை பார்த்து வருவதாகவும் சூர்யா இதை கண்டிக்காதது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் சற்று முன்னர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ’ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் மட்டுமே வெளியிட வெளியாகி உள்ளது என்றும் இந்த படத்தை பேருந்துகள் ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒளிபரப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி பொதுஇடங்களில் ’ஜெய்பீம்’ திரைப்படத்தை திரையிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய ரசிகர்கள் இது போன்ற பொது இடங்களில் ’ஜெய்பீம்’ படத்தை பார்க்க வேண்டாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Streaming the movie #JaiBhim in public is illegal. Necessary legal action will be taken against anyone screening the film for commercial benefits.
We kindly request the #AnbaanaFans and loving audience not to support such illegal activities. pic.twitter.com/h0tqMYX9sN
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) November 2, 2021








