சினிமா செய்திகள்
விதை நீங்கள் போட்டது: கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய சூர்யா!

சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு முதல் நாளே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் இந்த படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த படத்தை பார்த்து இரண்டு பக்கங்களுக்கு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பதும் பா ரஞ்சித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் இந்த படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இன்று காலை ஜெய்பீம் படத்தைப் பார்த்து தனது டுவிட்டரில், ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தா செ ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்று பதிவு செய்திருந்தார்.
கமல்ஹாசனின் இந்த டுவிட்டுகு நன்றி தெரிவித்த சூர்யா, ‘நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.
நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது!
உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி!! ???????? https://t.co/JfYu0o2t6S— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2021








