சினிமா
பிக்பாஸ் ஜனனியை இன்று சந்திக்க வேண்டுமா?

பிக்பாஸ் புகழ் ஜனனி அய்யரை இன்றே சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.
அவன் இவன், தெகிடி போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஜனனி அய்யர், நல்ல படங்களில் நல்ல வேடங்களில் நடித்தாலும், முன்னணி நாயகியாக ஜனனி அய்யரால் வர முடியவில்லை. இதனால், மேலும் பிரபலமாக வேண்டும் நினைத்த அவர் பிக்பாஸ் 2வில் கலந்து கொண்டார்.
விஷ பாட்டில் என்ற பெயர் எடுத்த அவருக்கு தனியாக ஜனனி ஆர்மியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜனனி அய்யர், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், இன்று மாலை 6 மணிக்கு சென்னை, அண்ணா நகரில் உள்ள வி.ஆர். மாலில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்தும் சென்னை டைம்ஸ் பிரெஷ் ஃபேஸ் 2018 நிகழ்ச்சியை ஜனனி அய்யர் நடத்த உள்ளார்.
ஜனனி ஆர்மி ரசிகர்களே இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது. இப்பவே ஜனனியை பார்க்க கிளம்புங்க!








