விளையாட்டு
மீண்டும் முதலிடம்: கோடிகளில் புரளும் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக இவர் இடம்பெற்றுள்ளார்.
விராட் கோலி உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வருகிறார். எதிரணியினர் அஞ்சும் சிறந்த பேட்ஸ் மேனாக உள்ள அவரது ஆட்ட நுனுக்கங்கள் நாளுக்கு நாள் சிறப்பாக அமைந்து வருகிறது. கிரிக்கெட், விளம்பரம் என எப்போதும் பிசியாகவே இருக்கும் விராட் கோலி ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகில் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
அந்த பட்டியலில் ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 82-வது இடத்திலுள்ள விராட் கோலி, கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரது கடைசி ஒரு வருட வருமானம் சுமார் ரூ. 170 கோடி. விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளார்.


















