இந்தியா
திருப்பதியில் இலவச டோக்கன் திடீர் நிறுத்தம்: பக்தர்கள் போராட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று திடீரென இலவச தரிசன டோக்கன் தராமல் நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதியில் கடந்த சில நாட்களாக இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக உள்ளூர் மக்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தினமும் 8 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேற்று மட்டும் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் டோக்கன் வாங்க காத்திருந்ததை அடுத்து நேற்றே இன்றைக்குரிய டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. இதனால் இன்று டோக்கன் வாங்க வரிசையில் காத்திருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பக்தர்கள் திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பதி போலீசார் பக்தர்களை சமாதானப்படுத்தி வழியனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களில் அன்றைக்கு உரிய டோக்கன்களை அன்றுதான் வழங்குவோம் என்றும் முந்தைய நாள் வழங்கப்படமாட்டாது என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




