சினிமா செய்திகள்
காவல்துறையில் திடீரென புகார் அளித்த நடிகர் சூர்யா: காரணம் என்ன?

காவல்துறையில் திடீரென சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி கடந்த சில வருடங்களாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி போலியான விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.
அந்த விளம்பரத்தில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக ஆடிஷன் நடைபெறுவதாகவும் இந்த ஆடிஷனில் கலந்து கொள்வதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து சூர்யா காவல்துறையில் புகார் அளித்ததோடு தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி போலியான இமெயில் முகவரியில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்து ஏமாந்து விட வேண்டாம்.
எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை நாங்கள் ஆடிஷனுக்கு யாரையும் அழைப்பது அழைப்பதில்லை. எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் இயக்குனர்கள் மட்டுமே ஆடிஷன் நடத்துவார்கள். அதிலும் கட்டணம் பெறப்படுவதில்லை. இது முழுக்க முழுக்க போலியான நிறுவனம்.
இது குறித்து காவல்துறையில் நாங்கள் புகார் அளித்துள்ளோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இதுபோன்ற போலி நிறுவனத்திடம் பொதுமக்கள் தங்களுடைய தகவல்களை பகிர்ந்து ஏமாற வேண்டாம் என்றும் கட்டணமும் கட்ட வேண்டாம் என்றும் விழிப்புடன் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
2D Entertainment Private Limited does not conduct any such auditions directly. All auditions for our projects are conducted only by the respective Director’s team in their respective offices. We do not charge any payment for auditions.
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 25, 2021
We hereby request the general public to exercise utmost caution & care and not to share any personal and confidential information without verifying whether such emails and offers for auditions are bonafide and genuine.
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 25, 2021












