சினிமா
சூரரைப்போற்று படத்திற்கு 2 விருதுகள்… கொத்தாக அள்ளிய சூர்யா….

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான போதும் மாபெரும் வெற்றிப் படமாக இந்தத் திரைப்படம் கொண்டாடப்பட்டது.
இந்தப் படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இந்தப் படம் மாபெரும் அங்கீகாரத்தை அளித்து கவுரவித்துள்ளது.

இந்நிலையில், மெல்போன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் என்கிற விருதை சூரரைப்போற்று படம் பெற்றுள்ளது. மேலும்,சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரையுலகத்தினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் மெல்போன் இந்திய திரைப்பட குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், சுதாகொங்கரா என்னை மாறாவாக உருவாக்கினார். சூரரைப்போற்று படக்குழுவினருக்கு இந்த விருது சமர்ப்பணம்’ என பதிவிட்டுள்ளார்.
.@IFFMelb you made it very special for us with 2 awards! Thank you #SudhaKongara for making me Maara… and trusting @2D_ENTPVTLTD #SooraraiPottru team this is for you..!
@CaptGopinath @gvprakash @Aparnabala2 @nikethbommi @editorsuriya @jacki_art @rajsekarpandian @PrimeVideoIN pic.twitter.com/tIKb2XjHNM— Suriya Sivakumar (@Suriya_offl) August 20, 2021




















