சினிமா
சர்கார் சர்ச்சை; வரலக்ஷ்மி விளாசல்!

அதிமுகவின் கடும் நெருக்கடியால் சர்கார் படத்தின் சில காட்சிகள் மறுதணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்டன. மேலும், படத்தில் வரலக்ஷ்மியின் கேரக்டர் பெயரான கோமளவல்லி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்றும், அவரை மறைமுகமாக தாக்குவதாகவும் கூறி ரகளை செய்தனர். இதனால், அப்பெயர் வரும் இடங்களையும் மியூட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வரலஷ்மி,” ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது. உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள், தயவு செய்து இந்த மாதிரியான முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தை பறிக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.






















