சினிமா
விஸ்வாசம் படத்தின் ஷூட்டின் ஓவர்! பொங்கலுக்குத் தல வறாரு!

விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவுற்றதாகப் படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஸ்வாசம் wrapped up என்ற ஹேஷ்டேக்கை தல ரசிகர்கள் டிரெண்டாக்க துவங்கி விட்டனர்.
தீபாவளிக்கு ரிலீசாகும் என்ற அறிவிப்போடு துவங்கப்பட்ட விஸ்வாசம் படப்பிடிப்பு காரணங்களால் பொங்கலுக்குத் தள்ளிப்போனது. படத்தின் 2 போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விரைவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ரிலீசாகும் என்ற மகிழ்ச்சியில் தல ரசிகர்கள் திருவிழா மோடுக்கு சென்றுள்ளனர்.















