இந்தியா
திருப்பதி கோவில் அருகே தீ விபத்து: 6 கடைகள் எரிந்து நாசம்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடை ஒன்றில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடை ஒன்றில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி 6 கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.
இதுகுறித்த தகவல் அறிந்த பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். திருப்பதிக்கு கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை இன்றி இருப்பதால் திருப்பதியில் உள்ள வியாபாரிகள் வருமானம் இல்லாமல் தவித்து வரும் இச்சூழலில் தீ விபத்துக்கு உள்ளான கடைகளின் உரிமையாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர்.





