Connect with us

இந்தியா

கேரளாவில் பாஜகவை ஒரு இடம் கூட கிடைக்காது; ஓட ஓட விரட்டுவோம்: பினராயி விஜயன் உறுதி

Published

on

Kerala CM's Tamil tweet on Gaja relief is the best you can see today!

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. வரும் மே 2 ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்படும். கேரளாவைப் பொறுத்தவரை இந்த முறை ஆளும் இடதுசாரிகள் தரப்புக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக ஒன்றிரண்டு இடங்களில் வேண்டுமானால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று தன் வாக்கைச் செலுத்தவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:-

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி வரலாற்று வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என நம்புகிறேன். இடதுசாரிகளுடன் துணையாக இருக்கும் மக்கள் மீது தீவிரமான நம்பிக்கை இருக்கிறது.

எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்பதை மக்கள் உள்ளாட்சித் தேர்தலின்போது மாபெரும் வெற்றியளித்து நிரூபித்துவிட்டார்கள். இது சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். மக்கள் இடதுசாரிகளுக்கு அளப்பரிய ஆதரவு அளித்ததை தேர்தல் பிரச்சாரத்தில் காண முடிந்தது.

கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்கள், வெள்ளம், மழை, தொற்றுநோய் போன்ற காலங்களில் நாங்கள் செய்த உதவிகள், திட்டங்கள், சேவைகளால் மக்கள் நிச்சயம் எங்களுடன் இருப்பார்கள். அனைத்து நேரங்களிலும் எங்களுக்கு ஆதரவாக இருந்த மக்கள் நிச்சயம் நல்லவிதமான தீர்ப்பை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

பாஜக, நீமம் தொகுதியில் மட்டும் கடந்த தேர்தலில் வென்றது. ஆனால், இந்த முறை பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்க விடமாட்டோம். பாஜகவுடன் சில தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ரகசிய உடன்பாடு ஏதும் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. கடந்த தேர்தலைவிட இந்த முறை நாங்கள் வரலாற்று வெற்றி பெறுவோம். ஐயப்ப பக்தர்களும், அனைத்துக் கடவுள்களும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

இவ்வாறு பினராயி விஜயன் நம்பிக்கையுடன் கருத்துகளைத் தெரிவித்தார். 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

கட்டுரைகள்23 minutes ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா38 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.06.2026

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா1 நாள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்1 நாள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்1 நாள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா1 நாள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்2 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
heavy equipment transport nueces tx. Learn more about troubleshooting wordpress. power only louisiana.