தமிழ்நாடு
ஒருநாள் கூட விடுமுறை எடுக்காத முதலமைச்சர் நான் ஒருவர் தான்: எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத முதலமைச்சர் நான் மட்டுமே என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார்.
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருச்சியில் நேற்று தேர்தல் பரப்புரை செய்த முதல்வர் பழனிசாமி ’அதிமுக அரசு தூங்கிக்கொண்டிருக்கும் அரசு அல்ல என்றும், விழிப்புடன் செயல்பட்டு வரும் அரசு என்றும் பல்வேறு தேசிய விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது என்றும் கூறினார்.
மேலும் தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றிலேயே ஒரு நாள் கூட சட்டப் பேரவைக்கு விடுமுறை எடுக்காத முதலமைச்சர் நான்தான் என்றும் அவர் பெருமையுடன் கூறியுள்ளார். முதல்வரின் இந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















