தமிழ்நாடு
பொன்.ராதாகிருஷ்ணனை ‘பொய் ராதாகிருஷ்ணன்’ என்றுதான் கூறவேண்டும்: ஸ்டாலின்

முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனை, பொய் ராதாகிருஷ்ணன் என்று கூறுவதே சரியாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.
அவர் இந்த பிரச்சாரத்தின் போது கூறியபோது ’கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கும் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என அதிமுக-பாஜக தேர்தலுக்காக பொய் கூறுவதாகவும் டெண்டர் விளம்பரம் வெளியிட்டு விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என பொன் ராதாகிருஷ்ணன் பொய் கூறுகிறார் என்றும் அவரை பொன் ராதாகிருஷ்ணன் என்று கூறுவதற்கு பதிலாக பொய் ராதாகிருஷ்ணன் என்று தான் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மத்திய பாஜக ஆட்சிக்கு வந்ததால் தான் தமிழக மீனவர்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்று கூறியதாகவும் ஆனால் ஏழு ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் முக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.ays mk stalin


















