தமிழ்நாடு
இனி ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டாம்: இன்று முதல் தொடங்கும் புதிய சேவை

ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கம, ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியை மாற்ற உள்பட ஒருசில தேவைகளுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருந்த நிலையில் இன்று முதல் அதற்கு அவசியமில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் சட்டமன்றத்தில் பேசிய போது பொதுமக்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வராமலேயே ஆதார் அட்டையின் அடிப்படையில் பழகுநர் உரிமம் ஓட்டுனர், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெறலாம் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த சேவையை தொடங்கி வைத்தார். ஆதார் எண்ணை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம் செய்தல், ஓட்டுனர் பழகுநர் உரிமம் ஆகிய சேவைகளை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த நிலையில் இன்று முதல் இனி ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் ஆன்லைன் மூலமே அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.