தமிழ்நாடு
தங்கம் விலை மீண்டும் குறைந்தது. இன்றைய ஒரு சவரன் விலை என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது தங்கம் விலை தாறுமாறாக ஏறியது என்பதும் அதன் பின்னர் கொரனோ வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு தங்கம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை இறங்கிக்கொண்டே இருக்கும் நிலையில் இன்றும் தங்கம் சவரனுக்கு ரூபாய் 328 குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,192-க்கு விற்பனையாகி வருகிறது. எனவே சவரனுக்கு ரூபாய் 328 ரூபாய் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.33,536 என விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ரூபாய் கிராம் ஒன்றுக்கு ரூ.68.50 என விற்பனையாகி வருகிறது என்பதும் ஒரு கிலோ வெள்ளி 68 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.














