சினிமா செய்திகள்
டி.எஸ்.பி இசைக்க… கீர்த்தி சுரேஷ் பாட… பிசி ஶ்ரீராம் எடுத்த வைரல் வீடியோ..!

இசை அமைப்பாளர் டி.எஸ்.பி கீபோர்டு வாசிக்க நடிகர் கீர்த்தி சுரேஷ் பாடும் காட்சியை பிசி ஶ்ரீராம் படம்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அந்தக் காட்சி தற்போது வைரல் ஆகியுள்ளது.
தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் நடிகர் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்திலும் இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்திலும் நடித்து வருகிறார். இதுபோக தெலுங்குவில் நான்கு படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதில் தெலுங்கு நடிகர் நிதின் உடன் ரங்தே என்னும் படத்தில் நாயகியாக கீர்த்தி நடிக்கிறார்.
இந்தப் படத்தில் டி.எஸ்.பி இசையில் கீர்த்தி பாடுகிறார் எனத் தெரிகிறது. டிஎஸ்பி ஸ்டுடியோவில் கீர்த்தி பாடுவதை ஒளிப்பதிவாளர் பிசி ஶ்ரீராம் படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கீர்த்தி ஏற்கெனவே சாமி-2 படத்தில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#RangDe
Another video of Keerthi jamming at Devi’s studio .@dirvenky_atluri @ThisIsDSP @actor_nithiin @SitharaEnts @KeerthyOfficial pic.twitter.com/5lRwLDOWqn— pcsreeramISC (@pcsreeram) February 4, 2021


















