சினிமா செய்திகள்
‘பாகுபலி’ படத்தின் குழந்தை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்த ’பாகுபலி’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
உலகம் முழுவதும் இந்திய திரைப்படம் என்றால் இந்தி மொழி திரைப்படங்கள் தான் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தென்னிந்தியாவிலும் ஒரு திரை உலகம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வைத்தது இந்த திரைப்படம் தான். பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் சேர்ந்து ரூபாய் 2,500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பதும் இந்திய திரையுலகில் இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு குழந்தையுடன் அரண்மனையில் இருந்து வெளியேறுவார் என்பதும் கட்டப்பா கேரக்டரில் நடித்த சத்யராஜும் அந்த குழந்தையை எடுத்துக் கொஞ்சுவார் என்பதும் தெரிந்தது.
அனுஷ்காவின் குழந்தையாக குட்டி ‘பாகுபலியாக’ நடித்த அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், அந்த குழந்தையின் பெயர் ’தன்வி’ என்பதும் அந்த குழந்தை தற்போது யூகேஜி படித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த புகைப்படத்தை பார்த்து பாகுபலி படத்தில் பார்த்த கைக்குழந்தையா இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டது என்று அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது
బాహుబలి సినిమాలో కట్టప్ప ఎత్తుకున్న ఈ పాప(మహేంద్ర బాహుబలి) ఇప్పుడు యూకేజీ చదువుతుంది. పేరు తన్వి. @ssrajamouli pic.twitter.com/Aj31XvG6EB
— DONTHU RAMESH (@DonthuRamesh) January 27, 2021




















