சினிமா
சைஃப் அலி கானின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு! நெகிழ்ச்சியான சம்பவம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் சமீபத்தில் அவரது உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவுக்கு தனது நன்றியை தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சம்பவம் கடந்த 16 ஆம் தேதி நடந்தது, அப்போது சைஃப் அலி கான் மீது அவரது வீட்டில் திருடன் தாக்குதல் நடத்தி 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.
தாக்குதலுக்குப் பிறகு, சைஃப் அலி கானை அவரது வீட்டு பணியாளர்கள் உடனடியாக மீட்டு, லீலாவதி மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். அப்போது அவசரமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர் ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணா.
சிகிச்சைக்குப் பிறகு சைஃப் அலி கான் 5 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பினார். அதற்கு முன்னர், பஜன் சிங் ராணாவை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த சைஃப், அவரின் உதவியை அங்கீகரிக்கும் விதமாக ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கினார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர் எந்தவித பணமும் பெறாமல் மனிதாபிமானத்துடன் உதவியதால் இந்த சம்பவம் பலரின் மனதை கவர்ந்துள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















