இந்தியா
விவசாயிகள் போராட்டத்தில் அரசுக்கு லைனில் வந்து ஆதரவளித்த கிரிக்கெட் பிரபலங்கள்… வளைந்து கொடுக்காத தல தோனி..!

விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக கிட்டத்தட்ட நாட்டில் உள்ள முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் அனைவரும் கருத்து கூறி விட்டனர். அதில் இருந்து தப்பிய ஒரே ஆள் ‘தல’ தோனி மட்டும்தான். இந்த காரணத்தினால் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் தோனியைப் புகழ்ந்து வருகிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. நேற்று ஹாலிவுட் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா தன்பெர்க், பிரபல போர்ன் ஸ்டார் மியா கலிஃபா உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்கள். இதற்கு இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எதிர் கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். விவசாயிகள் போராட்டம் குறித்து இது நாள் வரை எதுவும் பேசாமல் இருந்த பலர், நேற்று குபீரென்று பொங்கியெழுந்தது விமர்சனங்களுக்கு உள்ளானது.
எல்லாவனோட சுயரூபமும் தெரியுறப்ப தல உண்மையாவே தங்கம்..❤️#FarmersProtest pic.twitter.com/IQSLbEXPMw
— James Stanly (@JamesStanly) February 3, 2021
அதே நேரத்தில் தோனி, எப்போதும் போல, விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் எந்த வித கருத்தையும் கூறாமல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்று அனைத்து கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் திடீரென கொதித்தெழுந்து கருத்து சொன்னது, வெறுமனே நடந்திருக்காது என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து அனைவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் எனப்படுகிறது.
ஏங்க.. BCCI கிட்ட இருந்து ஒரு Forward Message வந்திருக்கு.. pic.twitter.com/KEm9Q8RA5c
— James Stanly (@JamesStanly) February 4, 2021
நாட்டின் முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் தோனிக்கும் அந்த அழுத்தம் சென்றிருக்கும் என்றே சொல்லப்படுகிறது. அப்படி இருந்தும், விவசாயிகள் போராட்டம் குறித்து எவ்வித கருத்தையும் கூறாமல் அவர் தவிர்த்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.




















