இந்தியா
விவசாயிகள் போராட்டத்துக்கு சச்சினின் ‘குபீர்’ கொந்தளிப்பு; மீம்ஸ்களால் வைத்து செய்த நெட்டிசன்ஸ்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. நேற்று ஹாலிவுட் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா தன்பெர்க், பிரபல போர்ன் ஸ்டார் மியா கலிஃபா உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்கள். இதற்கு இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எதிர் கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். விவசாயிகள் போராட்டம் குறித்து இது நாள் வரை எதுவும் பேசாமல் இருந்த பலர், நேற்று குபீரென்று பொங்கியெழுந்தது விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கருத்து அதிக சர்ச்சைக்கு உள்ளானது.
நேற்று சச்சின், ‘இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க முடியாது. வெளிநாட்டு சக்திகள், நம் நாட்டைப் பார்க்கலாமே தவிர நம் விவகாரங்களில் பங்கேற்கக் கூடாது. இந்தியாவைப் பற்ற இந்தியர்களுக்குத் தெரியும். அவர்கள் தான் தமக்கு என்ன வேண்டும் என்று முடிவு செய்வார்கள். ஒரு தேசமாக நாம் இணைந்து நிற்போம்’ என்று ரிஹானாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சூசகமாக தெரிவித்தார். அவரைப் போலவே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் உள்ளிட்டோரும் கருத்துப் பதிவிட்டுள்ளனர். பாலிவுட்டின் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர்.
இதனால் கொதிப்படைந்த நெட்டிசன்ஸ், மீம்ஸ்களால் பிரபலங்களை வறுத்தெடுத்தனர்:
All these Indian big shot celebs remained mute when protesting farmers were being walled in,their electricity, water&internet cut off& BJP goons brought in to stone them;
They suddenly unmuted themselves when @rihanna& @GretaThunberg spoke out!
Spineless,heartless sarkari celebs! https://t.co/VBzHZm5kWQ— Prashant Bhushan (@pbhushan1) February 3, 2021
“கிரிக்கெட் டீம்ல சில சங்கீஸ் இருக்காங்க”ன்னு தான்டா இவ்ளோ நாளா நினைச்சிட்டு இருந்தேன்.
ஆனா “சங்கீஸ்கிட்ட தான் கிரிக்கெட் டீம் மொத்தமும் இருக்கு”ன்னு இப்போதான்டா தெரியுது. pic.twitter.com/8KMBOX5d7w
— ஜோக்கர்…???????? (@ItsJokker) February 3, 2021
Dear Sachin: India’s sovereignty rests with the people. The Constitution starts with “We, the people of India”. Foreigners can’t take that away. But if we are not careful, our own govt can.
Also, wish you had spoken up for farmers. Then Rihanna wouldn’t have to. #FarmersProtest https://t.co/EMIAbqwAeR
— Salman Anees Soz (@SalmanSoz) February 3, 2021
கிரிக்கெட் மட்டும் விளையாடுங்கடா, கை தட்டுறோம்.. கருத்தெல்லாம் சொல்லாதீங்க.. கருமாந்திரமா இருக்கு.. pic.twitter.com/ltm5iMk3XF
— ஆல்தோட்டபூபதி (@thoatta) February 3, 2021
Is this tweet about what the Chinese are doing on the LAC? https://t.co/reTZQd6S0K
— Stanly Johny (@johnstanly) February 3, 2021
Lost respect on him when he begged the then Vajpayee Govt to get tax-exemption for his Ferrari.
He must be returning the favour he got from BJP.https://t.co/rY8sIKIyDe pic.twitter.com/OeTOiH9bWy
— பூதம் (@angry_birdu) February 3, 2021




















