சினிமா செய்திகள்
மகனுக்காக அப்பா கதாபாத்திரத்தை ஏற்ற நடிகர் அருண் விஜய்..!- குடும்பத்துடன் நடக்கும் ஷூட்டிங்

நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ் விஜய் தற்போது நடிகர் சூர்யா-வின் 2டி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் தனது மகன் சினிமாவில் அறிமுகம் ஆவதால் மிகவும் பெருமை கொள்வதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படம் ஒரு குழந்தை நாயகனுக்கும் ஒரு நாய்க்கும் இடையேயான கதை ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அர்னவ் விஜய்-க்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க பட இயக்குநர் சண்முகம் அருண் விஜய் இடமே கேட்டுள்ளார்.
ஆனால், அருண் விஜய் முதலில் மகனுக்காக நடிக்கவில்லை என்றும் கதைக்குத் தேவையென்றால் மட்டும் கேளுங்கள் என இயக்குநரிடம் சொல்லி உள்ளார். இதையடுத்து அறிமுக இயக்குநர் சண்முகம் அருண் விஜய் கதாபாத்திரத்தை விளக்க அந்தக் கதை அருணுக்கும் பிடித்துப் போய்விட்டதாம். இதனால், அப்பாவும் மகனுமே ஒரே படத்தில் அப்பா- மகன் ஆக நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருவதால் பட ஷூட்டிங்-க்கு மொத்த குடும்பத்துடனும் கலந்து கொள்கிறாராம் அருண் விஜய்.

















