சினிமா செய்திகள்
Breaking: கொரோனாவில் இருந்து மீண்டார் எஸ்.பி.பி!

பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா நெகடிவ் ஆனதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து எஸ்பிபி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதன் பிறகு கொரோனாவின் தொற்று தீவிரமானதை அடுத்து வெண்டிலேட்டரில் வைத்து எஸ்பிபிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. பின்னர் நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டு அதற்காகவும் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
எஸ்பிபி உடல் நிலை மிகவும் மோசமான நிலையில், திரை உலகினர் அனைவரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.
இந்நிலையில் இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ள எஸ்பிபி சரண், தந்தைக்கு கொரோனா நெகடிவ் என சோதனை முடிவுகள் வந்துவிட்டது.
நுரையீரலில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் பாதிப்பாலான காயங்கள் குணமடைய வேண்டும். அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றனர். எழுத்து மூலம் பேசத்தொடங்கியுள்ளார் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். இந்த செய்தி எஸ்பிபி ரசிகர்களிடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








