சினிமா செய்திகள்
#BigilTrailerDay : இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் பிகில் டிரெய்லர்!

தீபாவளி வெளியீடாகத் தயாராகி வரும் பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
பிகில் திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று வெளியாக உள்ள பிகில் டிரெயலர் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் எண்டெர்டென்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.


















