சினிமா செய்திகள்
ஒளிப்பதிவாளர் ரவி வர்மனை ஓரங்கட்டிய ஷங்கர்!

இந்தியன் 2 படம் வெளிவருமா வராதா என பல்வேறு சந்தேகங்கள் இருந்து வந்த நிலையில், மீண்டும் முழு வீச்சில் படத்திற்கான பணிகளை இயக்குநர் ஷங்கர் துவங்கி உள்ளார். அதன் ஒரு கட்டமாக ஒளிப்பதிவாளர் ரவி வர்மாவுக்கு பதிலாக ரத்ன வேலை படத்தில் இணைத்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான போது, அது தனக்கு திருப்திகரமாக இல்லை என கமல் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இயக்குநர் ஷங்கரும் அதையே ஃபீல் பண்ணியதாக தெரிவித்தார். இந்நிலையில், ஒளிப்பதிவாளர் ரவி வர்மாவுக்கு பதிலாக ரத்ன வேலை புக் செய்துள்ளனர்.
இந்த படத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசன் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.
















