Connect with us

தமிழ்நாடு

டெல்லியில் மண்டியிட்டு மடிப்பிச்சை: எஸ்.பி.வேலுமணியை விளாசிய மு.க.ஸ்டாலின்!

Published

on

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து குடிநீர் பிரச்சனையை போக்க உரிய நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் திருந்தியபாடில்லை. நாள்தோறும் குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத் திண்டாடும் மக்கள் பற்றித் துளியும் கவலைப்படாமல், கட்சிக் கூட்டங்களையும் நடத்திக் கொண்டும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டும், மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்று அலட்சியமாகவும் ஆணவத்துடனும் இருக்கும் அதிமுக ஆட்சியாளர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சென்னைக்கு எவ்வளவு குடிநீர் தேவை என்பதைக் கூடத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் தினமும் 7000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்து கொண்டு வருகிறோம் என்று இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவரே பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறிக்கொட்டி, பத்திரிக்கையாளர் நகைப்புக்குப் பாத்திரமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

கமிஷன் ஒன்றே கண்கண்ட தெய்வம் என்று கண்களை மூடித் தவமிருக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணிக்குத் தெரியாமல் இருப்பது அவரது பணி அமைச்சர் பணியல்ல. கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் மட்டுமே என்பது ஊருக்கும் உலகத்திற்கும் தெளிவாகிறது. சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் ஒரு நாளைக்கு சென்னை மக்களுக்கு 825 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய சூழலில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் வேலுமணி, ஜூன் 15-ஆம் தேதி வரைதான் 500 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று கூறி விட்டு, பிறகு நவம்பர் வரைகூட ஓரளவு சப்ளை செய்து விட முடியும் என்று கூறினார்.

அப்படியிருக்கும் போது குடியிருப்பு வாசிகள் ஆன்லைனில் புக்கிங் செய்யும் டேங்கர் லாரி குடிநீருக்காக 15 முதல் 18 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏன் வந்துள்ளது? தெருத்தெருவாக மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு சைக்கிளிலும், ரிக்‌ஷாக்களிலும் தொலை தூரம் சென்று ஒரு குடம் தண்ணீர் சேகரிக்கத் தள்ளப்பட்டுள்ளது ஏன்? மெட்ரோ வாட்டர் குழாய்களில் வரும் குடிநீரும் பல இடங்களில் துர் நாற்றம் வீசுவது ஏன்? தண்ணீர் இல்லாமல் பல உணவகங்கள் மூடப்படுவது ஏன்? தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் ஐ டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை.

சென்னைக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரைப் பெறுவதற்குக் கூட ஆந்திர மாநில முதல்வரைச் சந்திக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக டெல்லிக்குச் சென்று பாஜக மத்திய அமைச்சர்களைச் சந்தித்து எங்கள் கட்சிப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள், எங்கள் மீது எந்த ஊழல் நடவடிக்கையும் எடுத்து விடாதீர்கள் என்று மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்டுக் கெஞ்சுவதை மட்டுமே உள்ளாட்சித்துறை அமைச்சர் இந்த மூன்று வருடங்களில் செய்து கொண்டிருக்கிறார்.

புதிய மெகா கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றவோ, கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டங்களை விரைந்து முடிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியத்திலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும் டெண்டர்களில் கமிஷன் வசூல் செய்வதில் காட்டும் அக்கறையில் ஒரு துளியை உள்ளாட்சித் துறை அமைச்சர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் காட்டியிருந்தால்- சென்னைக்கான அந்த இரு திட்டங்களை நான்குவருடத்தில் நிறைவேற்றியிருந்தால், இன்று சென்னை மக்கள் குடிநீர்ப் பஞ்சத்தில் துடிக்க வேண்டிய நிலை, துயரப்பட வேண்டிய நிலை வந்திருக்காது.

ஆகவே சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட வேண்டும். உள்ளாட்சித்துறை அமைச்சரின் படு தோல்விதான், இன்று சென்னை மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு மக்களும் குடிநீருக்கு அலையும் கொடுமைக்கு முழுக்காரணம். ஆகவே இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அவர் ராஜினாமா செய்யத் தவறினால், முதலமைச்சர் உடனடியாக, இன்றைய குடிநீர்ப் பஞ்சத்திற்கும் கோடானுகோடி மக்களின் துன்பத்திற்கும் வித்திட்ட அவரை, அமைச்சர் பதவியிலிருந்து தயவு தாட்சண்யம் பார்க்காமல் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என விளாசியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா1 நாள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா1 நாள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்7 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்7 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

இந்தியா7 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

சினிமா7 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

Translate »
Bizimle bağcılar taksi hizmeti almak, güven ve konfor demektir. レコメンド. 家居 ip cam 解決方案.