Connect with us

இந்தியா

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

Published

on

  1. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், சுமார் ₹8 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கைப்பற்றும் நோக்கில், தனது கணவர், மகன் மற்றும் உறவினர் ஒருவருக்கு ஓராண்டுக்கும் மேலாக உணவில் ஈயம் கலந்து கொடுத்ததாக 42 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  2. புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலைய உச்சியில் தீபம் ஏற்றப்படும்- சென்னையில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேச்சு
  3. தமிழ்நாடு முழுவதும் கடந்த ங0 ஆண்டுகளில் காணாமல் போன 3 லட்சம் பேரில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 575 பேர் கண்டுபிடிப்பு. 15959 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல்.
  4. இந்தியாவின் தங்க்க்கடன் சந்தை ஓராண்டில் 60.6% வளர்ந்து ரூ.23.03 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் தமிழ்நாடு முதலிடம்.  தமிழ்நாட்டிலிருந்து ரூ.6.9 லட்சம் கோடி வழங்கப்பட்டள்ளது. கடன்வாங்குவோர் எண்ணிக்கை 5.6 கோடி. பெண் கடனாளர்கள் 2.4 கோடி. 2026 ஜூலை – செப்டம்பர் காலாண்டில் மட்டும் 45.7 லட்சம் புதிய கடனாளர்கள்  இணைந்துள்ளனர்.
  5. சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனூரா மீது யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.5 வீதத்தால் அதிகரித்து 94.61 அமெரிக்க டொலராகவும், அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் விலை 2 வீதத்தால் அதிகரித்து 83.68 டொலராகவும் பதிவாகியுள்ளது.
  6. பதினெட்டாவது மக்களவையின் எட்டாவது கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தொடங்குகிறது.  அரசாங்கப் பணிகளின் அவசியங்களுக்கு உட்பட்டு, இந்த அமர்வு 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி வியாழக்கிழமை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைச் செயலகத்தின் அறிவிப்பு.
  7. அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வழக்கு முடிந்த பிறகு மீதி 3 தொகுதிகளுக்கம் இடைத்தேர்தல் நடத்த அனுமதிக்கப்படும். – ஐகோர்ட்.
  8. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பல ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக 290 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்திய மதிப்பில் இது சுமார் 26 லட்சம் கோடி ரூபாய். இந்தத் தொகையை அமெரிக்காவிடமிருந்து வசூலிப்பது ஈரானுக்குப் பெரும் சட்டச் சவாலாக இருக்கும்.
  9. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.60 உயர்ந்து கிராம் ரூ.11600க்கும் சவரன் 92800க்கும் விற்பனையாகிறது.
  10. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.170க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.170000க்கும் விற்பனை ஆகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized4 minutes ago

நம்ம இந்தியாவில் மழைக்கால இரவுகளில் காடே பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் போல மின்னும் அதிசயம் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்தியா12 minutes ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

செய்திகள்2 மணி நேரங்கள் ago

27.11.2026 வெள்ளி கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா16 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 26.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

ஏஐ மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை கசியவிட்டால் பயப்படாதீர்கள்.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

சோலார் போட்டுடலாமானு தோணுதா அவசரப்படாதீங்க. உங்க EB பில்லே அதற்கு பதில் சொல்லிடும்.

இந்தியா21 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

செய்திகள்24 மணி நேரங்கள் ago

அணு ஆயுத செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ரஷ்யா திட்டம்? – உளவு அமைப்புகள் எச்சரிக்கை!

இந்தியா1 நாள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

Uncategorized7 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

Uncategorized6 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா5 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

ஆரோக்கியம்4 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

இந்தியா6 நாட்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா7 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

தமிழ்நாடு6 நாட்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

Translate »
Calendar month rabu.